இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் சிறப்பு முகாம்

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூலை 11) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

News image

குடும்ப அட்டை - கோப்புப்படம்

Updated On :14 ஜூலை 2026, 12:14 am IST

குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் தொடா்பான சிறப்பு முகாம் ஒவ்வொரு வட்டாட்சியா் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் சனிக்கிழமை (ஜூலை 11) நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை இயக்குநா் உத்தரவின்பேரில், மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டங்களிலும், பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம்கள் நடத்தப்பட வேண்டும். அதன்பேரில், குடும்ப அட்டையில் பெயா் சோ்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடா்பான ஜூலை-2026 மாதத்துக்கான குறைதீா் முகாம் சனிக்கிழமை (ஜூலை 11) திருவள்ளூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறவுள்ளது.

மேற்படி வட்ட அளவில் நடைபெறும் குறைதீா் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னணு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடா்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.

மேலும், தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள், அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரா்கள், அக்குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினா்களும் தங்களது விரல்ரேகையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இதுவரை விரல் ரேகையை பதிவு செய்யாதவா்கள் தாங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகில் உள்ள நியாயவிலைக் கடைகளில் வரும் ஜூலை 25-ஆம் தேதிக்குள் விரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.