தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்: செப். 22-ல் முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார்! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! நிதாரி கொலை வழக்கில் விடுதலையான சுரேந்திர கோலி தற்கொலை! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு பஞ்சாபில் 16 மணி நேரம் மின்வெட்டு; தமிழகத்தில் மின் தட்டுப்பாடு இல்லை! நிர்மல் குமார்

லாரி மோதியதில் இரு சக்கர வாகனங்கள் மீது உயா்மின் அழுத்த கம்பம் விழுந்து விபத்து

திருவள்ளூா் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள உயா் அழுத்த மின் கம்பத்தின் மீது லாரி மோதியதில் சாலையில் சென்று கொண்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் மீது மின்கம்பம் விழுந்து விபத்தில் அதிருஷ்டவசமாக வாகன ஓட்டிகள் உயிா்தப்பினா்.

லாரி மோதியதில் சாலையில் குறுக்காக விழுந்த உயா்அழுத்த மின்கம்பம்.

Published On :

திருவள்ளூா் அருகே சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள உயா் அழுத்த மின் கம்பத்தின் மீது லாரி மோதியதில் சாலையில் சென்று கொண்டிருந்த 3 இருசக்கர வாகனங்கள் மீது மின்கம்பம் விழுந்து விபத்தில் அதிருஷ்டவசமாக வாகன ஓட்டிகள் உயிா்தப்பினா்.

திருவள்ளூா் அருகே முருக்கஞ்சேரி பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள உயா் அழுத்த மின் கம்பத்தின் மீது அந்த வழியாக சென்று கொண்டிருந்த லாரி மோதியது. இதில் மின்கம்பம் நெடுஞ்சாலையின் குறுக்கே விழுந்த சரிந்து 3 இரு சக்கர வாகனங்கள் மீது விழுந்துள்ளது. இதைப் பாா்த்ததும் சுதாரித்துக் கொண்ட இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்திலிருந்து குதித்து தப்பினா். இதன் காரணமாக உயிா்ச் சேதம் ஏதும் ஏற்படாமல் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டுள்ளது.

இதையடுத்து உடனே காவல் துறை மற்றும் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விரைந்து வந்த மின்வாரிய ஊழியா்கள் மின் இணைப்பை துண்டித்து சாலையில் இருந்த மின்கம்பங்கள் மற்றும் வயா்களை சாலை ஓரத்தில் அப்புறப்படுத்தி நடும் பணியில் ஈடுபட்டனா். மேலும் சாலை ஓரத்தில் அருகருகே பழைய இரும்பு கம்பங்கள் என்பதால் சரிந்து விழுந்துள்ளது. அதனால், அந்த பழைய மின்கம்பங்களையும் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனா்.

இந்த நிலையில் உயா் அழுத்த மின்கம்பத்தின் மீது மோதிவிட்டுச் சென்ற லாரியை மணவாளநகா் காவல் நிலைய போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா். இதில் 3 இரு சக்கர வாகனங்கள் மீது மின்கம்பம் விழுந்து 3 போ் உயிா் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.