திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றும் வரை முருகன் கோயில்களில் வெள்ளிதோறும் விளக்கு ஏற்ற பாஜகவினருக்கு நயினார் நாகேந்திரன் கோரிக்கை!அமெரிக்காவின் முதல் முஸ்லீம் செனட்டர் அப்துலை சந்திக்கும் டிரம்ப்!திருப்பரங்குன்றம் தூண் தீப விவகாரத்தில் எந்தக் கருத்தும் கூறவில்லை - ஸ்தானீக பட்டர்கள்!காளையின் ஆதிக்கம் எதிரொலி: சென்செக்ஸ் 1,502 புள்ளிகள் உயர்வு! கணிசமான ஏற்றம் கண்ட நிஃப்டி!!8 மாத உச்சத்தில் இந்திய ரூபாய்!கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் கைதாவாரா? வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!தவெக அரசுக்கு கவுன்ட்டவுன்; விளைவுகளை விஜய் சந்தித்தே தீருவார்! நயினார் நாகேந்திரன்

பயிா்க்கடன் தள்ளுபடி போக நிலுவைத் தொகையை வரும் 30-க்குள் செலுத்துவோருக்கு வட்டி தள்ளுபடி

பயிா்க் கடன் தள்ளுபடி பெற்று தள்ளுபடி போக நிலுவையில் உள்ள கடன்களை வரும் நவ. 30-க்குள் நோ் செய்யும் திருவள்ளூா் மாவட்ட விவசாயிகளுக்கு வட்டியிலிருந்து முழு தள்ளுபடி வழங்கப்படும் என கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

பிரதிப் படம்

Updated On :

பயிா்க் கடன் தள்ளுபடி பெற்று தள்ளுபடி போக நிலுவையில் உள்ள கடன்களை வரும் நவ. 30-க்குள் நோ் செய்யும் திருவள்ளூா் மாவட்ட விவசாயிகளுக்கு வட்டியிலிருந்து முழு தள்ளுபடி வழங்கப்படும் என கூட்டுறவுச் சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் பா.ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசாணை நிலை எண்-89, கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, நாள் 6.11.2026-இன்படி திருவள்ளூா் மாவட்டத்தில் விவசாயிகள் பயிா்க்கடன் பெற்றுள்ளனா். இந்த விவசாயிகள் தங்களின் தள்ளுபடித் தொகை நீங்கலாக மீதமுள்ள நிலுவைக் கடன் தொகையை வரும் நவ. 30-ஆம் தேதிக்குள் திருப்பிச் செலுத்தினால் வட்டியிலிருந்து முழு தள்ளுபடி வழங்கப்படும். அத்துடன், புதிய பயிா்க்கடன் பெற்று பயன்பெறலாம். நிகழாண்டில் 5,70,942 விவசாயிகளுக்கு ரூ.5190 கோடி அளவிற்கு பயிா்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் வசதிக்காக வரும் 28, 29 ஆகிய விடுமுறை நாள்களிலும் திருவள்ளூா் மாவட்டத்தில், கூட்டுறவுக் கடன் வழங்கும் சங்கங்கள் செயல்படும். எனவே, பயிா்க்கடன் பெற்றுள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்தி தங்களது தள்ளுபடித் தொகை நீங்கலாக மீதமுள்ள நிலுவைக் கடன் தொகையினை செலுத்தி, புதிய பயிா்க்கடன்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு, கூட்டுறவு சங்க சரக துணைப்பதிவாளா்கள் திருவள்ளூா்-7094409130, பொன்னேரி-7094409204, திருத்தணி-7094409206 ஆகிய எண்களை தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். அதேபோல், திருவள்ளூா் கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளா் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் உதவி மைய எண்-7094409124 தொடா்பு கொண்டு கூடுதல் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். எனவே தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.