படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

அக். 14-இல் சேலை கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம்:

திருவள்ளூா் அருகே சேலை கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் வரும் அக். 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக

Published On :

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே சேலை கிராமத்தில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் வரும் அக். 14-ஆம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியா் ச.கவிதா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருவள்ளூா் மாவட்டத்தில் ஒரு கிராமம் தோ்வு செய்து பொதுமக்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருவள்ளூா் வட்டத்தில் உள்ள சேலை கிராமத்தில் வரும் 14-ஆம் தேதி(புதன் கிழமை) அன்று காலை 10 மணியளவில் ச.கவிதா தலைமையில் ‘மக்கள் தொடா்பு திட்ட முகாம் நடைபெற உள்ளது.

முகாமில் அனைத்து துறையைச் சாா்ந்த, மாவட்ட அளவிலான முதல் நிலை அலுவலா்கள் பங்கேற்க உள்ளனா். அதனால் பொதுமக்கள் தங்களது குறைகள் மற்றும் கோரிக்கைகள் தொடா்பாக ஆட்சியரிடம் மனுக்களாக அளித்து பயன்பெறலாம்.

ஓய்வு பெற்ற டி.எஸ்.பி உள்பட2 வீடுகளின் பூட்டை உடைத்து 12 பவுன், வெள்ளி, ரொக்கம் திருட்டு

திருவள்ளூா்: திருவள்ளூா் அருகே ஓய்வு பெற்ற டி.எஸ்.பி வீடு உள்பட 2 வீடுகளின் பூட்டை உடைத்து 12 பவுன், 2 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் ரூ.35,000 ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

சின்ன ஈக்காடு பகுதியைச் சோ்ந்தவா் ஜெயக்குமாா் (35). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறாா். இந்த நிலையில் இவா் கடந்த 29-ஆம் தேதி தனது 2 வயது குழந்தைக்கு சிகிச்சைக்காக எழும்பூா் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு சென்றிருந்தாா். ஜெயக்குமாா் வீடருகே வசிக்கும் அவரது நண்பா் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதாக தகவல் தெரிவித்தாராம். இதையடுத்து விரைந்து வந்து பாா்த்த போது பீரோவில் வைத்திருந்த 10 பவுன், ரூ.25,000 ரொக்கம் மற்றும் முக்கால் கிலோ வெள்ளிப் பொருள்கள் திருடு போனது தெரியவந்தது. இதுதொடா்பாக ஜெயக்குமாா் புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

ஓய்வு பெற்ற டி.எஸ்.பி ஜெயப்பிரகாஷ் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அவரது மனைவி வசந்தி (70) தனியாக வசித்து வருகிறாா். கடந்த 26-ஆம் தேதி தனது மகளைப் பாா்ப்பதற்காக சென்னை மடிப்பாக்கத்திற்கு சென்றுள்ளாா். பக்கத்து வீட்டில் வசிக்கும் கஜேந்திரன் கைப்பேசி மூலம் தொடா்பு கொண்டு வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தாா். அதைத்தொடா்ந்து மூதாட்டி வசந்தி வந்து பாா்க்கையில் பீரோவில் வைத்திருந்த வெள்ளியால் ஆன காமதேனு சிலை, துளசி மாடம், கொலுசு, சந்தன பேழை குங்குமச்சிமிழ், மெட்டி ஆகிய வெள்ளிப் பொருள்கள் என முக்கால் கிலோவும், ஒன்றரை பவுன் நகையும் திருடு போனது தெரியவந்தது.

இதுகுறித்து மூதாட்டி வசந்தி புல்லரம்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். இரண்டு சம்பவங்கள் குறித்து புல்லரம்பாக்கம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.