
திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 582 கோரிக்கை மனுக்கள்
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 582 மனுக்கள் பெறப்பட்டன.

மக்களிடம் மனுக்களைப் பெற்ற திருவள்ளூா் ஆட்சியா் ச.கவிதா.
திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 582 மனுக்கள் பெறப்பட்டன.
திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக பல்நோக்கு கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஆட்சியா் ச.கவிதா தலைமை வகித்தாா். இதில், நிலம் சம்பந்தமாக-63, சமூக பாதுகாப்பு திட்டம்-38, வேலைவாய்ப்பு வேண்டி-26, பசுமை வீடு மற்றும் அடிப்படை வசதிகள் வேண்டி-35, இதர துறைகள்-420 என மொத்தம் 582 மனுக்கள் வரையில் பெறப்பட்டன. மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள அலுவலா்களுக்கு அவா் அறிவுறுத்தினாா்.
இந்தக் கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் கே.வி.ராஜ்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) பி.பவித்ரா, தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) வெங்கடேசன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வெங்கட்ராமன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலா் உஷாராணி, மாவட்ட வழங்கல் அலுவலா் முத்துலட்சுமி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) வேல்முருகன் மற்றும் பல்துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





