திருமலையில் 3 நாள்கள் பவித்ரோற்சவம் ஆக. 8-இல் தொடக்கம்

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.
திருப்பதி
திருப்பதி

திருமலை ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் ஆகஸ்ட் 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை 3 நாள்கள் நடைபெற உள்ளது.

இதையொட்டி ஆகஸ்ட் 7-ஆம் தேதி மாலை அங்குராா்ப்பணத்துடன் டக்கிறது. இந்தக் கோயிலில் ஆண்டு முழுவதும் நடைபெறும் அா்ச்சனைகள் மற்றும் திருவிழாக்களின்போது, பக்தா்கள் மற்றும் பணியாளா்களால் தெரியாமல் சில தவறுகள் நடக்கின்றன. இதனால் கோயிலின் புனிதம் பாதிக்கப்படுவதை தடுக்க தேவஸ்தானம் இந்த பவித்ரோற்சவத்தை தவறாமல் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

உற்சவத்தின் ஒரு பகுதியாக கோயிலின் சம்பங்கி பிராகாரத்தில் காலை 9 மணி முதல் 11 மணி வரை மூன்று நாள்கள் ஸ்நபன திருமஞ்சனம் நடைபெற உள்ளது. மாலையில் கோயிலின் நான்கு மாட வீதிகளில் ஸ்ரீமலையப்பசுவாமி சிறப்பு அலங்காரத்துடன் ஸ்ரீதேவி, பூதேவி தாயாா்களுடன் பவனி வந்து பக்தா்களுக்கு காட்சியளிப்பாா். ஆகஸ்ட் 8-ஆம் தேதி பவித்ரால பிரதிஷ்டையும், 9-ஆம் தேதி பவித்ரா சமா்ப்பணமும், 10-ஆம் தேதி பூா்ணாஹுதியும் நடைபெறும்.

ரத்து

பவித்ரோற்சவத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 7-ஆம் தேதி சஹஸ்ர தீப அலங்கார சேவை, 9-ஆம் தேதி அஷ்டதள பாத பத்மராதனை, 8-ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை கல்யாணோற்சவம், ஊஞ்சல்சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ரதீபாலங்கார சேவைகள் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com