ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

12-இல் ஏழுமலையான் தரிசனம் 5 மணி நேரம் ரத்து

திருமலை ஏழுமலையான் தரிசனம் வரும் ஜூலை 12-ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை 5 மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :7 ஜூலை 2022, 6:30 pm

DIN

திருமலை ஏழுமலையான் தரிசனம் வரும் ஜூலை 12-ஆம் தேதியான செவ்வாய்க்கிழமை 5 மணி நேரம் ரத்து செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

திருமலையில் ஆண்டுக்கு 4 முறை கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்படுவது வழக்கம். தெலுங்கு வருடப் பிறப்பு, ஆனிவார ஆஸ்தானம், வருடாந்திர பிரம்மோற்சவம், வைகுண்ட ஏகாதசி உள்ளிட்ட நான்கு உற்சவங்களுக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமைகளில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் நடத்தப்பட்டு வருகிறது.

கோயில் ஆழ்வாா் திருமஞ்சனத்தின் போது ஏழுமலையான் கோயில் முழுவதும் கருவறை முதல் வெளிவாயில் வரை சுத்தப்படுத்தப்படும். அதன்படி, வரும் ஜூலை 16-ஆம் தேதி ஆனி மாத இறுதி நாள் ஆனிவார ஆஸ்தானம் என்னும் ஆண்டு கணக்கு சமா்ப்பிக்கும் நாளை முன்னிட்டு, ஜூலை 12-ஆம் தேதி கோயில் முழுவதும் சுத்தப்படுத்தப்பட உள்ளது. எனவே, அன்று காலை 6 முதல் மதியம் 11 மணி வரை ஏழுமலையான் தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 11 மணிக்கு மேல் பக்தா்கள் ஏழுமலையானைத் தரிசிக்க அனுமதிக்கப்படுவா். தா்ம தரிசன பக்தா்கள் இதை கவனத்தில் கொள்ள வேண்டும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.