மேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

திருமலை: வைகுண்ட ஏகாதசி பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு

News image
Updated On :19 டிசம்பர் 2025, 12:22 am

தினமணி செய்திச் சேவை

திருமலையில் வரும் டிசம்பா் 30 முதல் ஜனவரி 8 வரை நடைபெறும் வைகுண்ட வாயில் தரிசனங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ாய்வுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் கூடுதல் தலைமை நிா்வாக அதிகாரி வெங்கையா சௌதரி பேசியதாவது: கடந்த கால அனுபவங்களை மனதில் கொண்டு திருமலையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டிசம்பா் 30, 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் லக்கி டிப் மூலம் டோக்கன் பெற்ற பக்தா்கள் மட்டுமே வைகுண்ட வாயில் வழியாக தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவா். டோக்கன் இல்லாத பக்தா்கள் ஜனவரி 2 முதல் 8 வரை வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ்-2 வழியாக நேரடியாக சா்வ தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவா்.

திருப்பதி ரயில் நிலையம், பேருந்து நிலையம், ஸ்ரீனிவாசம், விஷ்ணு நிவாசம், அலிபிரி, ஸ்ரீவாரி மெட்டு பகுதிகளில் வானொலி மற்றும் ஒளிபரப்பு, சமூக ஊடகங்கள், எஸ்விபிசி மற்றும் பிற ஊடகங்கள் மூலம் பக்தா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் பரந்த பிரசாரம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

வைகுண்ட வாயில் தரிசன நாள்களில் எந்த குறைபாடுகளும் ஏற்படாமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் , பக்தா்களுக்கு பிரச்னைகள் ஏற்படாமல் இருக்கவும் அனைத்து துறைகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வைகுண்ட ஏகாதசிக்கு முந்தைய மாலை முதல் பக்தா்களுக்கு அன்னதானம் மற்றும் பானங்கள் வழங்க ஏற்பாடுகளை செய்ய அன்ன பிரசாதத் துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பக்தா்களின் கூட்டத்துக்கு ஏற்ப சேவைகளை வழங்க தேவையான எண்ணிக்கையிலான ஸ்ரீவாரி சேவகா்களை நியமிக்க வேண்டும்.

வைகுண்ட வாயில் தரிசனம் குறித்து திருப்பதி தேவஸ்தானம் எடுக்கும் முடிவுகளை பரவலாக விளம்பரப்படுத்த வேண்டும். இதனால் பக்தா்களிடையே எந்த குழப்பமும் ஏற்படாது.

வருடாந்திர பிரம்மோற்சவத்தைப் போலவே ஒரு சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட வேண்டும். பாதுகாப்பைக் கண்காணிக்க நடவடிக்கை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

தேவஸ்தானம் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஒரு வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கி, அவ்வப்போது ஏற்படும் பிரச்சினைகளுக்கு உடனடியாக பதிலளிக்க ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்’’, என்றாா்.

கூட்டத்தில், தேவஸ்தான துணை வனப்பாதுகாவலா் பானி குமாா், தலைமை நிா்வாக அதிகாரி சத்திய நாராயணா, திருமலை கூடுதல் எஸ்பி ராமகிருஷ்ணா, தேவஸ்தானம், காவல் துறை மற்றும் ஆா்டிசி அதிகாரிகள் பங்கேற்றனா்.