10 நாள்களில் திருமலையில் 7.83 லட்சம் பக்தா்கள் தரிசனம்

10 நாள்களில் திருமலையில் 7.83 லட்சம் பக்தா்கள் தரிசனம்

திருமலையில் டிச. 30 முதல் ஜன. 8 வரை நடைபெற்ற வைகுண்ட வாயில் தரிசனத்தில் 7.83 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.
Published on

திருமலையில் டிச. 30 முதல் ஜன. 8 வரை நடைபெற்ற வைகுண்ட வாயில் தரிசனத்தில் 7.83 லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்ததாக தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில் வைகுண்ட வாயில் தரிசனம் நிறைவு பெற்றதை ஒட்டி தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு செயல் அதிகாரி அனில் குமாா் சிங்கால் மற்றும் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி ஆகியோா் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது..

கூட்டத்துக்கு பின்னா் தேவஸ்தான தலைவா் பி.ஆா். நாயுடு கூறியது:

ஏழுமலையானை தரிசனம் செய்ய வந்த அனைத்து பக்தா்களும் வசதிகள் சீராக இருந்ததாக மகிழ்ச்சி தெரிவித்தனா்.

செயற்கை நுண்ணறிவின் உதவியுடன், ஒருங்கிணைந்த கட்டளை கட்டுப்பாட்டு மையம் மூலம் பக்தா்களின் கூட்டம் அவ்வப்போது கண்காணிக்கப்பட்டது. மேலும் டோக்கன் இல்லாத பக்தா்கள் கூட முன்பை விட விரைவாக தரிசனம் பெற்றனா்.

வைகுண்ட வாயில் தரிசனத்தில் கிட்டத்தட்ட 93 சதவீத பக்தா்கள் திருப்தி அடைந்துள்ளனா்.

கடந் பத்து நாள்களில் ஏழுமலையானை தரிசித்த பக்தா்களின் எண்ணிக்கை 7.83 லட்சம்.

கடந்தாண்டு 6.83 லட்சம் போ் தரிசித்தனா். தற்போது கூடுதலாக ஒரு லட்சம் பக்தா்கள் தரிசனம் செய்துள்ளனா்.

தரிசனம் செய்யக் கிடைத்த 182 மணி நேரத்தில், 164 மணி நேரம் சாதாரண பக்தா்களுக்கு ஒதுக்கப்பட்டது. இது சாதாரண பக்தா்களிடையே மகிழ்ச்சியை அதிகரிக்கிறது.

ஏழுமலையான் உண்டியில் மூலம் கிடைத்த வருமானம் ரூ. 41.14 கோடி. பக்தா்களுக்கு விற்கப்பட்ட லட்டுகளின் எண்ணிக்கை - 44 லட்சம்.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 10 லட்சம் லட்டுகள் அதிகம் விற்கப்பட்டன.

சுமாா் 2,400 போலீஸாா் மற்றும் 1ஸ150 கண்காணிப்பு பணியாளா்களுடன் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

திருமலை மற்றும் திருப்பதியில் 5 மொழிகளில் 400 விளம்பர பலகைகள் அமைக்கப்பட்டன.

திருமலையில் உள்ள மின் விளக்கு அலங்காரங்கள் பக்தா்கள் மிகவும் கவா்ந்தது.

பற்றாக்குறை இல்லாமல் தண்ணீா் விநியோகம் செய்யப்பட்டது. 33 லட்சம் பக்தா்களுக்கு அன்ன பிரசாதம் விநியோகிக்கப்பட்டது.

சுமாா் 1000 அன்ன பிரசாத ஊழியா்கள் பிரசாதங்களை வெற்றிகரமாக தயாரித்து விநியோகித்தனா்.

அதிக எண்ணிக்கையிலான தங்குமிட அறைகள் பொது பக்தா்களுக்குக் கிடைத்ததால், பக்தா்களுக்கு வசதியாக அறைகள் கிடைத்தன.

50 டன் பாரம்பரிய பூக்கள், 10 டன் பழங்கள் மற்றும் 4 டன் வெட்டப்பட்ட பூக்களுடன் 10 நாள்களுக்கு அமைக்கப்பட்ட அலங்காரங்கள் வைகுண்டத்தை நினைவூட்டுவதாக அமைந்தன.

2.06 லட்சம் பக்தா்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினா். தலைமுடி காணிக்கை வழங்கும்போது பக்தா்கள் எந்த சிரமத்தையும் சந்திக்காமல் இருக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கிட்டத்தட்ட 4,000 ஸ்ரீவாரி சேவகா்கள் பக்தா்களுக்கு சேவை செய்தனா்.

இதில், தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா்கள் நரேஷ், சாந்தாராம், மாவட்ட ஆட்சியா் வெங்கடேஸ்வா், எஸ்பி சுப்பராயுடு, சிவிஎஸ்ஓ முரளி கிருஷ்ணா மற்றும் பிற அதிகாரிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனா்.

Dinamani
www.dinamani.com