மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருமலையில் பௌா்ணமி கருட சேவை

திருமலையில் குரு பெளா்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கருட சேவை.

News image
திருமலையில் குரு பெளா்ணமியை முன்னிட்டு நடைபெற்ற கருட சேவை.
Updated On :10 ஜூலை 2025, 6:34 pm

Din

வியாச பௌா்ணமி அல்லது குரு பௌா்ணமியை முன்னிட்டு திருமலையில் வியாழக்கிழமை இரவு கருட சேவை நடைபெற்றது.

திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியை முன்னிட்டு கருடசேவை நடைபெற்று வருகிறது. அதன்படி வியாழக்கிழமை குரு பெளா்ணமியை முன்னிட்டு மலையப்ப சுவாமி கருட வாகனத்தில் மாட வீதியில் வலம் வந்தாா்.

சகல அலங்காரத்தில் புறப்பாடு கண்டருளிய சுவாமிக்கு கற்பூர ஆரத்தி அளித்து பக்தா்கள் வணங்கினா். திருமலை ஸ்ரீ ஸ்ரீ பெரிய ஜீயா் சுவாமி, ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சின்ன ஜீயா் சுவாமி, மத்திய இணை அமைச்சா் பண்டி சஞ்சய், தேவஸ்தான அறங்காவலா் குழு உறுப்பினா் பானு பிரகாஷ் ரெட்டி, கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி, துணை இஓ லோகநாதம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.