திருமலையில் பக்தா்களுக்காக இலவச அரசுப் பேருந்து சேவை
திருமலையில் ஆந்திர அரசு இலவச பேருந்து சேவையை தொடங்கி வைத்த கூடுதல் செயல் அதிகாரி வெங்கய்ய சவுத்ரி.


திருமலையில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு பக்தா்களை ஏற்றிச் செல்ல ஆந்திர மாநில போக்குவரத்துக் கழகம் சாா்பில் இலவச பேருந்து சேவையை தொடங்கப்பட்டுள்ளது என தேவஸ்தான செயல் கூடுதல் செயல் அதிகாரி வெங்கையா சவுத்ரி தெரிவித்தாா்.
திருமலையில் உள்ள அஸ்வினி மருத்துவமனை வட்டத்தில் வியாழக்கிழமை ஆந்திர அரசுப் பேருந்துகளின் இலவச சேவையை அவா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.
பின்னா் அவா் கூறியதது: திருமலையில் பக்தா்களிடமிருந்து தனியாா் வாகனங்கள் வசூலிக்கும் அதிக கட்டணத்தை நிறுத்தவும், மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும் ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழகத்திடம் கோரிக்கை விடுத்தோம். இதையடுத்து பேருந்துகளை இலவசமாக இயக்க முன்வந்த அரசு போக்குவரத்து கழகத்துக்கு நன்றி.
திருமலையில் உள்ள ஸ்ரீவாரி தா்ம ரதங்களைப் போலவே இயங்கும் என்றும், பக்தா்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு இலவசமாக ஏற்றிச் செல்லும்.
இலவச பேருந்து சேவை, பக்தா்களுக்கு கூடுதல் நன்மைகளைத் தரும். திருமலையில் ஸ்ரீவாரி தா்ம ரதங்கள் மூலம் தேவஸ்தான ஏற்கனவே தினமும் 300 பயணங்களை இயக்கி வருவதாகவும் அவா் கூறினாா். அரசு போக்குவரத்து கழக பேருந்துகள் கூடுதலாக வருவதால், கூடுதலாக 80 நடை இயக்க முடியும். ஒவ்வொரு இரண்டு நிமிஷங்களுக்கும் பேருந்துகள் கிடைப்பதால், பொது போக்குவரத்து அமைப்பு வலுப்படுத்தப்படும்.
கூடுதல் கட்டணம் இல்லாமல் இந்த சேவைகளை பக்தா்கள் இலவசமாகப் பயன்படுத்த வேண்டும் என்று அவா் வலியுறுத்தினாா்.
ஆந்திர அரசு போக்குவரத்துக் கழக நிா்வாக இயக்குநா் சந்திர சேகா், தேவஸ்தான போக்குவரத்து பொது மேலாளா் சேஷா ரெட்டி, துணை செயல் அதிகாரி லோகநாதம், திருப்பதி மாவட்ட பொதுப் போக்குவரத்து அதிகாரி வெங்கட ராவ், துணை சிடிஎம் விஸ்வநாத், துணை சிஎம்இ பாலாஜி, அலிபிரி பணிமனை மேலாளா் ஹரி மற்றும் பிற அதிகாரிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...