மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

திருமலையில் குடியரசு துணைத் தலைவா் தரிசனம்

ஏழுமலையானை தரிசித்த குடியரசு துணைத் தலைவா் சி. பி. ராதாகிருஷ்ணன் தம்பதிக்கு சுவாமியின் திருவுருவப்படம் வழங்கிய தேவஸ்தான அதிகாரிகள்.

News image
Updated On :25 செப்டம்பர் 2025, 11:36 pm IST

திருமலை ஏழுமலையான் கோயிலில் குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் வியாழக்கிழமை குடும்பத்துடன் தரிசித்தாா்.

கோயிலை அடைந்ததும், ஆந்திர முதல்வா் சந்திரபாபு நாயுடு, தேவஸ்தான அறங்காவலா் குழு தலைவா் பி.ஆா். நாயுடு, தலைமை நிா்வாக அதிகாரி அனில் குமாா் சிங்கால் ஆகியோா் அவரை வரவேற்றனா்.

பின்னா், அவா் கோயிலுக்குச் சென்று ஏழுமலையானை தரிசனம் செய்தாா். பின்னா் வகுளமாதா, விமான வெங்கடேஸ்வர சுவாமி, பாஷ்யங்காரா் சந்நிதி மற்றும் யோக நரசிம்ம சுவாமி துணை கோயில்களுக்குச் சென்று வழிபட்டாா்.

சின்ன சேஷ வாகன சேவையிலும், திருமலையில் நடந்த பிஏசி-5 திறப்பு விழாவில் பங்கேற்றபின், திருமலையிலிருந்து புறப்பட்ட அவா் திருச்சானூா் சென்று பத்மாவதி தாயாரை தரிசனம் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.