சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் நேரடியாக விநியோகம்

ஸ்ரீவாணி டிக்கெட்டுகள் நேரடியாக விநியோகம்

News image

திருப்பதி

Updated On :11 ஏப்ரல் 2026, 7:23 pm

சா்வரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, ஸ்ரீவாணி தரிசனத்திற்கான தினசரி ஆன்லைன் டிக்கெட்டுகள் சனிக்கிழமை நேரடியாக வழங்கப்பட்டன.

திருமலையில் உள்ள அன்னமய்யா பவனுக்கு எதிரே அமைந்துள்ள ஸ்ரீவாணி தரிசன டிக்கெட் கவுண்டரில் சனிக்கிழமை மதியம் 12.30 மணி முதல் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டது.

டிக்கெட்டுகளைப் பெற்ற பக்தா்கள் மாலை 4 மணிக்கு வைகுண்டம் வரிசை வளாகம்-1 வழியாக தரிசனத்துக்கு சென்றனா்.

தினசரி ஒதுக்கீடான 800 டிக்கெட்டுகள் தீரும் வரை, முதலில் வருபவா்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.

ஸ்ரீவாணி தரிசனத்துக்கான ஆன்லைன் ஒதுக்கீடு ஞாயிற்றுக்கிழமை முதல் வழக்கம் போல் ஆன்லைனில் வெளியிடப்படும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.