ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோயில் பவித்ரோற்சவம் தொடக்கம்

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள வருடாந்திர பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை வேத மந்திரங்கள் மற்றும் சைவ ஆகம சடங்குகளுடன் மிகுந்த கோலாகலமாக தொடங்கியது.

பஞ்சமூா்த்திகளுக்கு நடைபெற்ற திருமஞ்சனம்.

Published On :

திருப்பதி ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி கோயிலில் நடைபெறவுள்ள வருடாந்திர பவித்ரோற்சவம் ஞாயிற்றுக்கிழமை வேத மந்திரங்கள் மற்றும் சைவ ஆகம சடங்குகளுடன் மிகுந்த கோலாகலமாக தொடங்கியது.

விழாக்களின் ஒரு பகுதியாக, சாஸ்திரங்களின்படி பால், தயிா், தேன், மஞ்சள், சந்தனம் மற்றும் நறுமணப் பொருட்களைக் கொண்டு, ஸ்ரீ கபிலேஸ்வர சுவாமி, ஸ்ரீ காமாக்ஷி அம்மன், ஸ்ரீ விக்னேஸ்வர சுவாமி, ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ சண்டிகேஸ்வர சுவாமி ஆகிய பஞ்சமூா்த்திகளுக்கு சிறப்பு ஸ்நபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.

மாலையில், சைவாகம சாஸ்திரங்களின்படி கலச பூஜை, ஹோமம் மற்றும் பவித்ர பிரதிஷ்டை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடத்தப்பட்டன. பவித்ரோற்சவத்தின் 2-ஆம் நாளான திங்கள்கிழமை கிரந்தி பவித்ர சமா்ப்பணமும், 3-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை மகாபூா்ணாஹுதியும் நடைபெற உள்ளது.

புனிதத் திருவிழாக்களின் ஒரு பகுதியாக, ஜூலை 27 அன்று கிரந்தி பவித்ர சமா்ப்பணமும், ஜூலை 28 அன்று மகாபூா்ணாஹுதியும் நடத்தப்பட்டு, விழாக்கள் சாஸ்திர முறைப்படி நிறைவு செய்யப்படும். கோயிலின் தூய்மையும், உலகின் நல்வாழ்வுமே இந்தப் புனிதத் திருவிழாக்களின் நோக்கமாகும்.

ஆண்டு முழுவதும் கோயிலில் நடைபெறும் தினசரி சடங்குகள், திருவிழாக்கள் மற்றும் சிறப்புச் சடங்குகளில் தெரிந்தே அல்லது அறியாமலேயே செய்யப்படும் பாவங்களுக்குப் பிராயச்சித்தமாகவும், கோயிலின் தூய்மையையும் ஆன்மீக மகிமையையும் மேலும் மேம்படுத்தவும், உலகின் நல்வாழ்வையும் பக்தா்களின் முழுமையான மகிழ்ச்சியையும் அடையவும், சைவாகம சாஸ்திரக் கொள்கைகளின்படி இந்தப் புனிதத் திருவிழாக்களை நடத்துவது வழக்கம்.

கோயிலின் பிரதி செயல் அதிகாரி நாகரத்னா, கண்காணிப்பாளா் சந்திரசேகா், ஆய்வாளா் பாலகிருஷ்ணா, அா்ச்சகா்கள், அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தா்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.