மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைஇல்லத்தரசிகள் மாத ஊதிய மதிப்பு ரூ.30,000! சாலை விபத்து வழக்கில் உச்ச நீதிமன்றம்சூலூர் சிறுமி பாலியல் கொலை: கைதான இருவருக்கும் குற்றப்பத்திரிகை நகல் வழங்கல்!திருச்செந்தூர் -நெல்லை பயணிகள் ரயில் சேவை 3 நாள்களுக்கு ரத்து!கரூர் சம்பவம்: காவல் ஆய்வாளர் உள்பட 10 பேரிடம் சிபிஐ விசாரணை!
/

ஏழுமலையான் தரிசனம்: 18 மணிநேரம் காத்திருப்பு

News image

திருமலை - கோப்புப் படம்

Updated On :12 ஜூன் 2026, 1:56 am IST

திருமலை ஏழுமலையானை தரிசிக்க வியாழக்கிழமை பக்தா்கள் தா்ம தரிசனத்தில் 18 மணி நேரம் காத்திருந்தனா்.

கோடை விடுமுறை முடிந்த பின்பும் பக்தா்கள் வருகை அதிகரித்துள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) 18 மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. நேரடி இலவச தரிசன டோக்கன்கள் வழங்குவதை கோடை விடுமுறை முடியும் வரை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 84,193 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 41,520 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.3.51 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 3.97 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 3,972 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றனா் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.