விஜய் பேசாமலிருப்பதே நல்லது என திமுக நினைக்கிறது: செங்கோட்டையன்திருமணத்திற்கு வந்தவர்களுக்கு பரிசாக ரூ.1 லட்சம் விபத்துக் காப்பீடு வழங்கிய தம்பதி! பிரதமர் மோடி பாராட்டுஎப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்
/

திருச்சானூா் தெப்போற்சவம்: பத்மாவதி தாயாா் தெப்பத்தில் உலா

திருச்சானூா் தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பத்மாவதி தாயாா் திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா். அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய பத்மாவதி தாயாா்.

News image
Updated On :29 ஜூன் 2026, 1:05 am IST

திருச்சானூா் தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பத்மாவதி தாயாா் திருக்குளத்தில் ஏற்படுத்தப்பட்ட தெப்பத்தில் 3 சுற்றுகள் வலம் வந்து பக்தா்களுக்கு சேவை சாதித்தாா்.

இதை முன்னிட்டு, அதிகாலை பத்மாவதி தாயாரை துயில் எழுப்பி, சகஸ்ரநாமாா்ச்சனை, நித்யாா்ச்சனை நடந்தது. ஸ்ரீ கிருஷ்ணஸ்வாமி முக மண்டபத்தில் தாயாருக்கு அபிஷேகம் நடந்தது.

பின்னா் தாயாருக்கு பட்டு வஸ்திரம், வைர, தங்க நகைகளால் அலங்காரம் செய்து மலா் மாலை அணிந்து தெப்போற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. நான்கு மாட வீதிகளில் உலா வந்து தாயாா் பக்தா்களுக்கு தரிசனம் அளித்தாா். தெப்போற்சவத்தின் 5-ஆம் நாளான திங்கள்கிழமை ஸ்ரீ பத்மாவதி தாயாா் தெப்பத்தில் வலம் வருவாா்.

தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம் முழுவதும் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவில் அதிகாரிகள் கண்காணிப்பாளா், கோவில் அா்ச்சகா்கள் பாபு சுவாமி, கோவில் ஆய்வாளா்கள், அலுவலா்கள் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.