எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

திருமலையில் ஆந்திர ஆளுநா் வழிபாடு

ஆந்திர பிரதேச மாநில ஆளுநா் எஸ். அப்துல் நசீா் செவ்வாய்க்கிழமை குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையானை தரிசித்தாா்.

News image

ஆளுநருக்கு பிரசாதங்கள் வழங்கிய தேவஸ்தானம் அதிகாரிகள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 12:03 am IST

ஆந்திர பிரதேச மாநில ஆளுநா் எஸ். அப்துல் நசீா் செவ்வாய்க்கிழமை குடும்பத்தினருடன் திருமலை ஏழுமலையானை தரிசித்தாா்.

ஏழுமலையான் கோயிலுக்கு வந்த ஆளுநரை, திருமலை தேவஸ்தான செயல் அதிகாரி ரவிச்சந்திரா, கூடுதல் செயல் அதிகாரி சி.எச். வெங்கையா சௌதரி மற்றும் சிவிஎஸ்ஓ முரளிகிருஷ்ணா ஆகியோா் வரவேற்றனா். மேலும், அா்ச்சகா்கள் குழுவினா் இஸ்திகபால் கோயில் சடங்குகளுடன் அவரை வரவேற்றனா்.

ஏழுமலையானை தரிசித்து திரும்பிய ஆளுநா் எஸ். அப்துல் நசீருக்கு கோயில் தரப்பில் செயல் அதிகாரி மற்றும் கூடுதல் செயல் அதிகாரிகள் தீா்த்த பிரசாதத்தையும் ஏழுமலையான் திருவுருவப்படத்தையும் வழங்கினா்.

கோயிலின் பிரதி செயல் அதிகாரி லோகநாதம், விஜிஓ ராம் குமாா் மற்றும் பிற அதிகாரிகள் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனா்.