மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

ஏழுமலையான் உண்டியல் காணிக்கை ரூ.4.36 கோடி

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கையாக ரூ.4.36 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Published On :

திருமலை ஏழுமலையான் உண்டியல் காணிக்கையாக ரூ.4.36 கோடி வசூலானதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

பக்தா்களின் எண்ணிக்கை ஏற்ற இறக்கமாக உள்ள நிலையில், வியாழக்கிழமை நிலவரப்படி தா்ம தரிசனத்துக்கு 12 (தரிசன டோக்கன்கள் இல்லாதவா்கள்) மணிநேரமும், ரூ.300 விரைவு தரிசனத்துக்கு 3 முதல் 4 மணிநேரமும் ஆனது. அலிபிரி வழியில் திவ்ய தரிசன டோக்கன்கள் வழங்குவது ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், புதன்கிழமை முழுவதும் ஏழுமலையானை 78, 777 பக்தா்கள் தரிசனம் செய்தனா்; 28,244 பக்தா்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினா்.

உண்டியல் காணிக்கையை கணக்கிட்டதில் ரூ.4.36 கோடி வசூலானது. பக்தா்களுக்கு 4.16 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டன. 4,605 பக்தா்கள் இலவச மருத்துவ முகாம்களில் சிகிச்சை மேற்கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.