மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

திருமலை தேவஸ்தான அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை

திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அதிகாரி லோகநாதத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.

லோகநாதம்

Published On :

திருமலை திருப்பதி தேவஸ்தான துணை செயல் அதிகாரி லோகநாதத்தின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்றது.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் துணை செயல் அதிகாரியான லோகநாதம் திருப்பதி பெத்தகாப்பு லேஅவுட்டில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகிறாா். இவா் தற்போது ஏழுமலையான் கோயிலின் துணை செயல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறாா்.

அவா் கடந்த காலங்களில் தேவஸ்தானத்தில் பல்வேறு பதவிகளிலும் பணியாற்றியுள்ளாா். இவா் கோடிக்கணக்கான மதிப்புள்ள சொத்துக்களை வாங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அவா் மீது கண்காணிப்பில் இருந்து வந்தனா்.

இந்தநிலையில் அவா் வீட்டில் இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள் அதிகாலை முதல் சோதனை மேற்கொண்டனா். இதில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டறிந்து அதற்கான ஆவணங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.