இலங்கையை சுழற்றிய சுதர்: முதல் டெஸ்ட்டில் இந்தியா அபார வெற்றிஇடதுசாரிகள் போராட்டத்தில் மாணவர்கள் பங்கேற்க தடை உத்தரவு வாபஸ்! தமிழ்நாடு முழுவதும் நாளை போராட்டம்: இந்திய மாணவர் சங்கம் அறிவிப்புஊழல் ஆதாரங்களை தேவையான நேரத்தில் வெளியிடுவோம்! முதல்வர் விஜய்ஆவின் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்வுஎம்.எல்.ஏக்களுக்கு அரசு சார்பில் கார்: முதல்வர் விஜய் அறிவிப்பு
/

மீசநல்லூரில் ரூ.2 கோடியில் இருளர்களுக்கு குடியிருப்புகள்:கட்டுமானப் பணி தொடக்கம்

வந்தவாசியை அடுத்த மீசநல்லூரில் ரூ.2 கோடி செலவில் இருளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தரப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

வந்தவாசியை அடுத்த மீசநல்லூரில் ரூ.2 கோடி செலவில் இருளர்களுக்கு குடியிருப்புகள் கட்டித் தரப்பட உள்ளது. இதற்கான பூமிபூஜை வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

செய்யாறு சார் ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை வகித்து பூமிபூஜையை நடத்தி வைத்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தின்கீழ் சுமார் ரூ.2 கோடி செலவில் இந்தக் குடியிருப்பு கட்டடங்கள் கட்டப்பட உள்ளன. இங்கு 43 குடியிருப்புகள், ஒரு அங்கன்வாடி கட்டடம், 2 பெட்டிக் கடைகள் உள்ளிட்டவை கட்டப்படும்.

இதில் மீசநல்லூர், ஏம்பலம், தெய்யாறு, ஏரிப்பட்டு உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 43 குடும்பங்கள் பயன்பெறுவர். மேலும், இவர்களுக்கு தலா ஒரு பசுமாடு வழங்கப்படும். இவர்களிடமிருந்து பாலை பெறுவதற்காக இந்தப் பகுதியில் பால் கூட்டுறவு சங்கம் அமைக்கப்படும்.

பசுமாடு தீவனத்துக்காக இந்தக் கட்டடத்தின் பின்புறம் 2 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும். இந்தப் பகுதிக்கு அப்துல்கலாம்புரம் என்று பெயரிடப்படும் என்றார்.

வந்தவாசி மண்டல துணை வட்டாட்சியர் மூர்த்தி, தெள்ளார் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆறுமுகம், சம்பத், மீசநல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் அஞ்சலை பொன்னப்பன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.