அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் ஊழலைக் கண்டித்து, சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சியினர்  புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் குமரிஆனந்தன் கலந்து கொண்டார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 3:21 am

DIN

மத்திய அரசின் ஊழலைக் கண்டித்து, சேத்துப்பட்டில் காங்கிரஸ் கட்சியினர்  புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர் குமரிஆனந்தன் கலந்து கொண்டார்.
மத்திய அரசின் ஊழலைக் கண்டித்தும், பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, அவரது மகன் ஜெய்ஷா ஆகியோர் மீது எழுந்துள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து நடவடிக்கை எடுக்கக் கோரியும், பிரதமர் மோடி பதவி விலகக் கோரியும் சேத்துப்பட்டு காமராஜர் சிலை அருகில் காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். துணைத் தலைவர்  யு.அருணகிரி, நிர்வாகி செய்யாறு தில்லை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுக்குழு உறுப்பினர் கலீம் வரவேற்றார்.
இதில் சிறப்பு விருந்தினராக மூத்த தலைவர் குமரிஅனந்தன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் தேசிய ஊடகத் துறை தொடர்பாளரும், முன்னாள் எம்எல்ஏவும் விஷ்ணுபிரசாத், முன்னாள் எம்எல்ஏ ராஜாபாபு, மாவட்ட மகளிர் பிரிவுத் தலைவர் வனமயில், நிர்வாகிகள் நந்தகுமார், அசோக்குமார், சிவாஜிமுருகன், ஜாபர்அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.