தேர்வெழுத வந்த இளைஞர்கள் திடீர் ரயில் மறியல் - கல்வீச்சு! ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்ந்து அதிகரிப்புஇந்தியாவில் 100 % எத்தனால் எரிபொருள்: மத்திய அமைச்சர் கட்கரி ஒப்புதல்தமிழகத்தில் ஜூன் 20 வரை மழைக்கு வாய்ப்புஓமன் துறைமுகத்தில் உயிரிழந்த தூத்துக்குடி மாலுமி உடலைக் கொண்டுவர நடவடிக்கைதேசியவாத குடிமக்கள் கட்சியில் இணைய திரிணமூல் அதிருப்தி எம்.பி.க்கள் முடிவுமாநிலங்களவையில் மூன்றில் இருபங்கு பெரும்பான்மையை நெருங்கும் பாஜக கூட்டணி!
/

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ரயில் மறியல்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, ஆரணியை அடுத்த கண்ணமங்கலம், போளூர் ஆகிய இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ரயில் மறியல்

Updated On :5 ஏப்ரல் 2018, 9:42 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து, ஆரணியை அடுத்த கண்ணமங்கலம், போளூர் ஆகிய இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
ஆரணி அடுத்த கண்ணமங்கலம் ரயில்வே கேட் அருகே நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்துக்கு 
மாவட்ட நிர்வாகி இரா.தங்கராஜ் தலைமை வகித்தார். ஆரணி வட்டாரச் செயலாளர் பி.ரவிச்சந்திரன், செய்யார் வட்டச் செயலாளர் ஏ.பத்ராஜலம், வந்தவாசி வட்டச் செயலாளர் கே.சாகித்பாஷா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
மறியலில் ஈடுபட்ட 25 பேரை கண்ணமங்கலம் போலீஸார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
போளூர்: போளூரில் இந்திய கம்யூனிஸ்ட் வட்டச் செயலாளர் இரா.ருத்திராச்சாரி தலைமையில் மன்னார்குடி-திருப்பதி விரைவு ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட துணைச் செயலாளர் சின்னக்குட்டி, செல்வராஜ், மாவட்ட மையக் குழு உறுப்பினர் நாராயணசாமி, மாவட்டத் தலைவர் சுப்பிரமணி, மாவட்டச் செயலாளர் ராஜேந்தின், மாவட்டக் குழு சாதிக்பாட்சா, வட்டச் செயலாளர் பாஸ்கரன், வட்டக்குழு ஆறுமுகம் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். 
ரயில் மறியலில் ஈடுபட்ட 9 பெண்கள் உள்பட 54 பேரை போளூர் போலீஸார் கைது செய்தனர்.
தனியார் மண்டபத்தில் தங்கவைக்கப்பட்ட அவர்கள் பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.