ரூ.ஒரு கோடி மதிப்பிலான வீட்டு மனையை விற்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டபோது மும்பையில் இறந்த கணவரின் சாவில் உள்ள மர்மம் குறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் பெண் மனு அளித்தார்.
தண்டராம்பட்டு வட்டம், பழைய சதக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (37). மும்பையில் உள்ள காகித தொழில்சாலையில் வேலை செய்து வந்தார். 20 ஆண்டுகளாக அங்கேயே வசித்து வந்த அவருக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது.
அந்த இடத்தின் தற்போதைய மதிப்பு ரூ.ஒரு கோடி. அண்மையில் சொந்த ஊருக்கு வந்திருந்த முருகனுடன் மும்பையில் அவருடன் வேலை செய்து வந்த விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் வட்டம், புதுப்பேட்டை பகுதியைச் சேர்ந்த சூர்யா, ஆலடியான் ஆகியோரும் வந்தனராம்.
பின்னர், மும்பையில் உள்ள முருகனின் இடத்தை விற்றால் ரூ.25 லட்சம் கிடைக்கும் என்று ஆசை வார்த்தை கூறி, அவரை சூர்யா, ஆலடியான் ஆகியோர் மும்பைக்கு அழைத்துச் சென்றனராம். இதையடுத்து, கடந்த 15-ஆம் தேதி முருகனின் மனைவி துக்கச்சியை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சூர்யா, ஆலடியான் ஆகியோர் மும்பையில் முருகன் இறந்துவிட்டதாகத் தெரிவித்தனராம்.
இந்த நிலையில், முருகன் மனைவி துக்கச்சி மற்றும் உறவினர்கள் செவ்வாய்க்கிழமை திருவண்ணாமலை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னியைச் சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில், முருகனை மும்பைக்கு அழைத்துச் சென்ற சூர்யா, ஆலடியான் ஆகியோரை விசாரிக்க வேண்டும் என்றும், முருகனின் உடலை பெற்றுத் தர மாவட்ட நிர்வாகம் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எரிபொருள் விலை உயர்வால் கேரளத்தில் பணவீக்கம் அதிகரிப்பு: முதல்வர்

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி, ஒருநாள் தொடருக்கான ஆப்கன் அணி அறிவிப்பு!

விருதுநகரில் 23 கல்குவாரிகளை மூட உத்தரவு! தென்காசியில் நேற்று 18!

ஜே.கே டயர் Q4 நிகர லாபம் 80% உயர்வு!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike


