வந்தவாசியை அடுத்த பாதூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீவிசாலாட்சி அம்மன் சமேத திருவனந்தீஸ்வரர் கோயிலில் தைப்பூச விழா புதன்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. பின்னர், சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. மேலும், கோயில் வளாகத்தில் சுவாமி உலா வந்தார்.
விழாவில் உபயதாரர்கள் எ.லோகநாதன், எ.பாஸ்கரன், எ.ராதாகிருஷ்ணன், எ.ரகுநாதன், கோயில் அர்ச்சகர் கணேசன் மற்றும் கிராம பொதுமக்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.