தொகுதி மறுசீரமைப்பு மசோதாவுக்கு எதிராக தனித் தீா்மானம்: பேரவையில் இன்று நிறைவேற்ற முடிவுகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புசுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு
/

மாடித்தோட்டம் அமைப்பது குறித்த 2 நாள் பயிற்சி முகாம்

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மாடித்தோட்டம் அமைப்பது குறித்த 2 பயிற்சி முகாமில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற மாடித்தோட்டம் அமைப்பது குறித்த 2 பயிற்சி முகாமில் மகளிர் சுயஉதவிக் குழுவினர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.
உணவுத் தேவையை தாங்களே நிறைவு செய்து கொள்ளவும், இயற்கை முறையில் தரமான காய்கள், பழங்களை விளைவிக்கவும் தமிழகத்தில் மாடித்தோட்டம் என்ற முறை பிரபலம் அடைந்து வருகிறது. இந்த நிலையில், மாடித் தோட்டம் அமைத்தல் குறித்த 2 நாள் பயிற்சி முகாம் கீழ்பென்னாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன், வியாழக்கிழமைகளில் (செப்டம்பர் 5, 6) நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் டி.கே.லட்சுமி நரசிம்மன் பயிற்சி முகாமை தொடக்கிவைத்து, மாடித் தோட்டம் அமைக்கும் முறைகள், அதன் பயன்பாடுகள் குறித்து விளக்கிப் பேசினார். மாடித் தோட்டப் பயிற்சியாளர் தமயந்தி மகளிர் சுயஉதவிக் குழுவினருக்குப் பயிற்சி அளித்தார்.
இந்த முகாமில், மாடித் தோட்டம் அமைக்கும் முறைகள், இயற்கை உரங்களின் பயன்பாடு, சமையல் அறை கழிவுகளில் இருந்து உரங்கள் தயாரித்தல், தரமான விதைகள் தேர்வு, மாடித் தோட்டம் அமைக்கத் தேவையான பொருள்கள் கொள்முதல், பசுமைக் குடில் அமைத்தல், பல்வேறு வகையான காய்கள், கீரைகள், பழங்களை வளர்க்கும் முறைகள், தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தும் முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில், 30 மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க 
களப்பணி வழிநடத்துநர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.