தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில், 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை மாலை நேர கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவண்ணாமலை, அண்ணா சிலை எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆசிரியர் கழகத்தின் மாவட்டத் தலைவர் மு.பிரசன்னா தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஏ.சீனு, மாவட்டப் பொருளாளர் டி.தீபக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநில துணைத் தலைவர் வி.சதாசிவம், தலைமையிடச் செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட சட்டச் செயலர் கோட்டீஸ்வரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில், நீட் பயிற்சி வகுப்புகளில் இருந்து முதுகலை ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
புதிதாக தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளுக்கு பழைய முறைப்படி கலைப்பிரிவு பணியிடங்களை வழங்க வேண்டும். காலியாக உள்ள தலைமை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர் பணியிடங்களை ஒளிவு மறைவற்ற வகையில் 2-ஆம்கட்ட கலந்தாய்வு மூலம் நிரப்ப வேண்டும் என்பன உள்பட 5 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதில், 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

”இனி நீங்க கனவு கண்டாலும் ஆட்சிக்கு வர முடியாது..!” பேரவையில் அமைச்சர் ஆனந்த் ஆவேசம்! | TVK

எதுக்கு கோவமா பேசுறீங்க? இது சட்டமன்றம்-ங்க! பேரவையில் திடீர் சலசலப்பு! | TVK | DMK | ADMK

கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம்: சீமான்

லீமா ரோஸ், உதயநிதி, ஆதவ் ஏழைகளா? ஆடம்பரத்துக்கு மக்கள் பணமா? நடிகை கஸ்தூரி கண்டனம்!
விடியோக்கள்

எதுக்கு கோவமா பேசுறீங்க? இது சட்டமன்றம்-ங்க! பேரவையில் திடீர் சலசலப்பு! | TVK | DMK | ADMK


