பாலியல் குற்றச்சாட்டு! தில்லி கேபிடல்ஸ் வீரர் அபிஷேக் போரல் கைது!நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!கர்நாடகத்துடன் முதல்வர் விஜய் பேச்சுவார்த்தை நடத்துவது நல்லதல்ல! ஓபிஎஸ் பேச்சுமுதல்வர் தலைமையில் போதைப்பொருள் எதிர்ப்பு உறுதிமொழியை ஏற்ற மாணவர்கள்!சென்னையில் இன்று முதல் நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி முகாம்!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2400 உயர்வுதமிழ் மீதான தாக்குதல்.. அமைச்சர் மரிய வில்சன் மன்னிப்புக் கேட்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்எம்.எட். சோ்க்கை: இன்றுமுதல் விண்ணப்பிக்கலாம்!
/

7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம உதவியாளர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 7 அம்சக் கோரிக்கைகளை 

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கத்தினர் 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை  ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிராம உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர்களுக்கு இணையான அடிப்படை ஊதியம் வழங்க வேண்டும். காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் போன்று கிராம உதவியாளர்களுக்கும் கடைசி மாத ஊதியத்தில் 50 சதவீதம் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது.
கீழ்பென்னாத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் வட்டத் தலைவர் சுந்தரம் தலைமை வகித்தார். செயலர் பிரபாகரன், துணைத் தலைவர் உத்திரகுமார், இணைச் செயலர் கங்கா பவானி, மாநிலச் செயற்குழு உறுப்பினர் எம்.குணசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கத்தின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கே.செல்வராஜ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
கோரிக்கையை வலியுறுத்தி 2-ஆம் கட்டமாக இந்தப் போராட்டம் நடைபெற்றது. மூன்றாம் கட்டமாக வரும் 27-ஆம் தேதி திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெறும் தர்னா போராட்டத்தில் திரளானோர் கலந்து கொள்வது என முடிவு செய்யப்பட்டது. போராட்டத்தில், சங்கத்தின் வட்டப் பொருளாளர் ராமதாஸ் மற்றும் 65 கிராம உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
வந்தவாசியில்...: வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில் சங்கத்தின் மாவட்டத் தலைவர் 
எம்.பிரபாகரன், வட்டத் தலைவர் டி.ஜி.சுப்பிரமணியன், மாவட்ட இணைச் செயலர் எஸ்.புனிதா, வட்ட துணைத் தலைவர் பிரகாஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.