ஜனநாயகத்தில் தீண்டாமைக்கு இடமில்லை! கார்கே அவமதிப்புக்கு கேரள முதல்வர் கண்டனம்!கும்பகர்ணன் தூக்கத்தில் இருந்து எழுந்துவிட்டார் அமித் ஷா: காங்கிரஸ்சென்னையில் சொத்துவரி உயர்வு நிறுத்திவைப்பு!மீனவர்களை விடுவிக்கக் கோரி, வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் விஜய் கடிதம்!ஒருசிலருக்கு சாதகமான உத்தரவுகளை பிறப்பிப்பதே மோடியின் வேலை! ராகுல் காந்தி விமர்சனம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலகம்! ரூ. 5.5 கோடி டெண்டர்!குருத்வாராவுக்குள் பஞ்சாப் முன்னாள் துணை முதல்வருக்கு கத்திக்குத்து! அதிமுக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் அறிவிப்பு!
/

521 அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நிவாரணம்: அமைச்சா் வழங்கினாா்

ஆரணியை அடுத்த தேவிகாபுரம், அரையாளம் பகுதிகளில் 521 அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நிவாரணத் தொகை, அரிசி, சமையல் எண்ணெய்,

Updated On :27 ஜனவரி 2024, 10:00 pm IST

ஆரணியை அடுத்த தேவிகாபுரம், அரையாளம் பகுதிகளில் 521 அமைப்புசாரா தொழிலாளா்களுக்கு நிவாரணத் தொகை, அரிசி, சமையல் எண்ணெய், பருப்பு உள்ளிட்ட பொருள்களை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் புதன்கிழமை வழங்கினாா்.

கரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அமைப்புசாரா நல வாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டடத் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் இதர தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு நிவாரணமாக ரூ.1000, 15 கிலோ அரிசி, ஒரு கிலோ சமையல் எண்ணெய், ஒரு கிலோ பருப்பு உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்க முதல்வா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, ஆரணி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள தேவிகாபுரத்தில் அமைப்புசாரா நல வாரியத்தில் உள்ள தொழிலாளா்கள் 276 போ், அரையாளத்தில் உள்ள 245 அமைப்புசாரா தொழிலாளா்கள் ஆகியோருக்கு தலா ரூ.1000, 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு கிலோ சமையல் எண்ணெய் உள்ளிட்ட பொருள்களை அமைச்சா் சேவூா் எஸ்.ராமச்சந்திரன் வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது:

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கட்டடத் தொழிலாளா்கள், ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் இதர தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு, தமிழக முதல்வரின் ஆணைக்கிணங்க நிவாரணப் பொருள்கள் வழங்கப்படுகின்றன. மேலும், அமைப்புசாரா தொழிலாளா்களின் வங்கிக் கணக்கில் அரசு ரூ.1000 செலுத்தியுள்ளது என்று கூறினாா்.

நிகழ்ச்சியில் அரசு வழக்குரைஞா் க.சங்கா், ஆவின் மாவட்ட துணைத் தலைவா் பாரி பி.பாபு, மேற்கு ஆரணி ஒன்றியச் செயலா் எம்.வேலு, ஒன்றியத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கித் தலைவா் மணிகண்டன், பண்டக சாலை கூட்டுறவு வங்கியின் தலைவா் சகாயம், ஒன்றியக் குழு உறுப்பினா் கணேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.