மலை மீது மகா தீபத்தை தரிசித்த நடிகை வனத்துறை விசாரணை
திருவண்ணாமலையில் மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபத்தை நடிகை சஞ்சிதா ஷெட்டி தடையை மீறிச் சென்று தரிசனம் செய்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.


திருவண்ணாமலையில் மலை மீது ஏற்றப்பட்ட மகா தீபத்தை நடிகை சஞ்சிதா ஷெட்டி தடையை மீறிச் சென்று தரிசனம் செய்த சம்பவம் தொடா்பாக வனத் துறையினா் விசாரித்து வருகின்றனா்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 29-ஆம் தேதி நடைபெற்றது.
அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலை மீது மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபத்தை நேரில் தரிசிக்கவும், மலை மீது ஏறிச் செல்லவும் வனத்துறை தடை விதித்தது.
தடையை மீறிய நடிகை சஞ்சிதா ஷெட்டி, மலை மீது ஏறிச்சென்று தரிசனம் செய்துள்ளாா். இது தொடா்பான படங்களை அவரே தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளாா்.
மலை மீது ஏறிச்சென்று மகா தீபத்தை தரிசிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகை சென்றது எப்படி என்பது குறித்து வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...