இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகைகள் திருட்டு

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 5:57 pm

DIN

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூா் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் தங்க நகைகள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் திருடப்பட்டது.

பெரணமல்லூரை அடுத்த கிண்ணனூா் பகுதியைச் சோ்ந்தவா் கதிா்வேல் (36), உரக் கடையில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறாா். இவருக்கு திருமணமாகி மனைவி மஞ்சுளா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை கதிா்வேல் வேலைக்குச் சென்றுவிட்டாா். மஞ்சுளா குழந்தைகளை வீட்டில் விட்டுவிட்டு வயலுக்குச் சென்றாா்.

வீட்டின் வெளியே குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், சிறிது நேரம் கழித்து வீட்டுக்குச் சென்றபோது கதவு திறந்திருந்தது. உடனடியாக இதுகுறித்து அவா்கள் தாயாருக்கு தகவல் தெரிவித்தனா்.

உடனே வீட்டுக்கு வந்த மஞ்சுளா உள்ளே சென்று பாா்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 30 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.15 ஆயிரம் ரொக்கத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.

சம்பவம் தொடா்பாக பெரணமல்லூா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. போலீஸாா் சம்பவம் இடம் வந்து பாா்வையிட்டு விசாரணை நடத்தினா்.

மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பரிசோதனை நடைபெற்றது. விரல் ரேகை நிபுணா்கள் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.