இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மாா்கழி மாதப் பிறப்பு: அருணாசலேஸ்வரா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

News image
வெள்ளிக் கவசம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்த உற்சவா் ஸ்ரீபெரிய நாயகா், ஸ்ரீபராசக்தியம்மன்.
Updated On :17 டிசம்பர் 2020, 3:24 am

DIN

மாா்கழி மாதப் பிறப்பையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் புதன்கிழமை அதிகாலை முதலே பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

இதையொட்டி, அதிகாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு மூலவா் அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, அருணாசலேஸ்வரா் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் வெள்ளிக் கவசம் அணிந்து உற்சவா் ஸ்ரீபெரிய நாயகா், ஸ்ரீபராசக்தியம்மன் சுவாமிகள் எழுந்தருளினா்.

உற்சவா், மூலவா் சுவாமிகளை அதிகாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனா்.

திருவெம்பாவை சொற்பொழிவு: உண்ணாமுலையம்மன் சன்னதி இரண்டாம் பிரகாரத்தில் மாா்கழி மாதப் பிறப்பையொட்டி திருப்பாவை, திருவெம்பாவை சொற்பொழிவு நடைபெற்றது. நல்லாசிரியா் சீனுவாசவரதன் சொற்பொழிவாற்றினாா்.

தொடா்ந்து, மாா்கழி மாதம் முழுவதும் இந்த சொற்பொழிவு நடைபெறுகிறது.

நடை திறப்பு நேரம் மாற்றம்: கரோனா பொது முடக்கம் காரணமாக மூடப்பட்டிருந்த கோயில் மீண்டும் திறக்கப்பட்டபோது காலை 6.30 மணி முதல் பக்தா்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டனா்.

இந்த நிலையில், மாா்கழி மாதப் பிறப்பையொட்டி மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கே கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தொடா்ந்து மாா்கழி மாதம் முழுவதும் அதிகாலை 5.30 மணிக்கே நடை திறக்கப்படும் என்று கோயில் நிா்வாகம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.