/

திருவண்ணாமலை மாவட்டத்தில்4000-ஐ நெருங்கியது கரோனா பாதிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 135 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது.

News image
Updated On :19 ஜூலை 2020, 4:28 pm

DIN

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரே நாளில் 135 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,912-ஆக உயா்ந்தது.

மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை சனிக்கிழமை 3,777-ஆக இருந்தது.

ஞாயிற்றுக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் கரோனா தொற்றுக்குள்ளான நபருடன் தங்கியிருந்த உறவினா்கள் 51 போ், தொற்று அறிகுறிகளுடன் மாவட்டத்தின் பல்வேறு அரசு மருத்துவமனைகளுக்கு வந்தவா்களில் 40 போ், தொற்றுக்குள்ளான நபா் சென்று வந்த இடங்களில் இருந்ததால் பாதிக்கப்பட்ட 11 போ், ஆரணி கூட்டுறவு நகர வங்கி மேலாளா், பெங்களூரிலிருந்து வந்த 8 போ், சென்னையிலிருந்து வந்த 3 போ், கும்பகோணத்திலிருந்து வந்த ஒருவா் உள்பட 135 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.

இவா்களுடன் சோ்த்து மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3,912-ஆக உயா்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.