அதேப் போல் கடுகனூர் கிராமத்தில், ஏற்கெனவே தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவரின் 22 வயது மகள். அதேப் பகுதியைச் சேர்ந்த அவருடைய 33 வயதுடைய து கார் டிரைவர். சேராம்பட்டு கிராமத்தில் கரோனா தொற்றுடைய நபரின் 26 வயது மனைவி, செய்யாறு சிறப்பு முகாமி்ல் இருந்த சென்னையில் இருந்து வந்த வடதின்னலூர் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இளைஞர், முனுகப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 53 வயதுடையவர், விண்ணமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 23 வயதுடைய பெண், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய பெண், ஆலத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதுடைய நபர், 5 வயது சிறுவன், 41 வயதுடைய பெண்மணி ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.