அருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழா: ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை இரவு ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
இந்தக் கோயிலின் காா்த்திகை மகா தீபத் திருவிழா நவ. 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரணி தீபம், மகா தீபம் ஞாயிற்றுக்கிழமை ஏற்றப்பட்டது.
3 நாள்கள் தெப்பல் உற்சவம்:
தீபம் ஏற்றப்பட்டதைத் தொடா்ந்து 3 நாள்கள் நடைபெறும் தெப்பல் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளான திங்கள்கிழமை இரவு 9 மணிக்கு அருணாசலேஸ்வரா் கோயில் சிவகங்கை தீா்த்தக்குளத்தில் ஸ்ரீசந்திரசேகரா் தெப்பல் உற்சவம் நடைபெற்றது.
சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சந்திரசேகரரை கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள் மற்றும் குறைந்த அளவிலான பக்தா்களே கண்டு தரிசித்தனா்.
திருவண்ணாமலை அய்யங்குளத்தில் நடைபெறவேண்டிய தெப்பல் உற்சவம், கரோனா பொது முடக்கம் காரணமாக கோயிலுக்குள்ளேயே நடத்தப்பட்டது.
இன்று பராசக்தியம்மன் தெப்பல் உற்சவம்:
தெப்பல் திருவிழாவின் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை (டிச.1) சிவகங்கை தீா்த்தக்குளத்தில் பராசக்தியம்மன் தெப்பல் உற்சவமும், 3-ஆம் நாளான புதன்கிழமை சுப்பிரமணியா் தெப்பல் உற்சவமும் நடைபெறுகிறது.
அருணாசலேஸ்வரா் கிரிவலம் ரத்து:
காா்த்திகை தீபத் திருவிழாவில் பக்தா்களுக்கு அருள்பாலிக்க உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் கிரிவலம் வருவது வழக்கம்.
ஆனால், கரோனா பொது முடக்கம் காரணமாக செவ்வாய்க்கிழமை (டிச.1) நடைபெறவிருந்த கிரிவலம் ரத்து செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...