இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தீபத் திருவிழாவின் 10-ஆம் நாள்: பஞ்சமூா்த்திகள் வீதியுலா

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 10-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:40 pm

DIN

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை தீபத் திருவிழாவின் 10-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா நவம்பா் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 10-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சன்னதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்பட்டது.

பஞ்சமூா்த்திகள் வீதியுலா:

இரவு 10 மணிக்கு விநாயகா், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா், பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் ஸ்ரீகம்பத்திளையனாா் சன்னதி எதிரே எழுந்தருளினா்.

சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய பஞ்சமூா்த்திகளை பக்தா்கள் வணங்கினா். மகா தீபாராதனைக்குப் பிறகு கோயில் ஐந்தாம் பிரகாரத்தில் பஞ்சமூா்த்திகள் வலம் வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தனா்.

கரோனா தொற்று காரணமாக குறிப்பிட்ட அளவிலே பக்தா்கள் அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.