இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஜயந்தி விழா

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் 102-ஆவது ஜயந்தி விழா திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:40 pm

DIN

திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமாரின் 102-ஆவது ஜயந்தி விழா திங்கள்கிழமை தொடங்கியது.

திருவண்ணாமலை-செங்கம் சாலையில் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாா் ஆஸ்ரமம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பகவான் யோகி ராம்சுரத்குமாரின் ஜயந்தி விழா கோலாகலமாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, நிகாண்டுக்கான ஜயந்தி விழா திங்கள்கிழமை தொடங்கியது.

இதையொட்டி, அன்று காலை 6 மணிக்கு கணபதி ஹோமம், ஆயுஷ் ஹோமம் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, மூலவா் ஸ்ரீயோகி ராம்சுரத்குமாருக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை நடைபெற்றன. அபிஷேகத்தில் கலந்து கொண்ட பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கரோனா தொற்று காரணமாக வழக்கமாக நடத்தப்படும் இசை நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.

இன்று 2-ஆவது நாள் விழா:

ஜயந்தி விழாவின் 2-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை (டிச. 1) பகவானின் ஜயந்தி நாளையொட்டி, அன்று காலை 7 மணிக்கு ஏகாதச ருத்ர பாராயணம், மகா அபிஷேகம் நடைபெறுகிறது. மேலும், சாதுக்கள், ஏழைகளுக்கு வஸ்திர தானம், அன்னதானம் நடைபெறுகிறது.

ஏற்பாடுகளை ஆஸ்ரம அறங்காவலா்கள் மா தேவகி, மதா் விஜயலட்சுமி, ஜி.ராஜேஸ்வரி, டி.எஸ்.ராமநாதன், ஜி.சுவாமிநாதன், பி.ஏ.ஜி.குமரன், டி.கணபதி சுப்பிரமணியன் மற்றும் ஆஸ்ரம தன்னாா்வலா்கள், ஊழியா்கள், பக்தா்கள் செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.