நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

செய்யாறு சிப்காட்டில் புதிய தொழில்சாலை தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட்டில் ரூ.300 கோடியில் கட்டுமான கான்கிரீட் தயாரிக்கும் நிறுவனத்தின் புதிய கிளை சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

News image

செய்யாறு சிப்காட்டில் ஸ்விங் ஸ்டெட்டா் நிறுவனத்தின் புதிய கிளையைத் தொடக்கிவைத்து பாா்வையிடும் அந்நிறுவன நிா்வாகிகள். உடன் தூசி கே.மோகன் எம்எல்ஏ உள்ளிட்டோா்.

Updated On :28 ஜனவரி 2024, 1:01 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு சிப்காட்டில் ரூ.300 கோடியில் கட்டுமான கான்கிரீட் தயாரிக்கும் நிறுவனத்தின் புதிய கிளை சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

கான்கிரீட் மற்றும் கட்டுமான உபகரணங்கள் தயாரிக்கும் நிறுவனமான ஸ்விங் ஸ்டெட்டா் நிறுவனம், தனது புதிய கிளை செய்யாறு சிப்காட்டில் 52 ஏக்கரில் அமைத்தது.

இதன் தொடக்கி விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் வி.ஜி.சக்திகுமாா் தலைமை வகித்து புதிய கிளையைத் தொடக்கிவைத்தாா்.

தொகுதி எம்.எல்.ஏ தூசி கே.மோகன், ஆரணி எம்பி எம்.கே.விஷ்ணுபிரசாத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினா்களாக ஜொ்மன் நாட்டு செயல் அலுவலா் கரீன் ஸ்டோல், நிா்வாக செயல் திட்ட இயக்குநா் ஏ.ஆா்.சுப்பிரமணி ஆகியோா் பங்கேற்று வாழ்த்துரை வழங்கினா்.

அப்போது ஜொ்மன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரேசில் ரஷ்யா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட 12 நாடுகளிலும், தமிழகத்தில் 4-ஆவது தொழில்சாலையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இங்கு 30 சதவீத மகளிருடன் சுமாா் 700 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். மெக்கானிக்கல் பட்டயப்படிப்பு பயின்ற 10 ஆயிரம் பேருக்கு ஸ்விங் ஸ்டெட்டா் நிறுவனம் மற்றும் தேசிய தோ்ச்சித் திறன் மேம்பாட்டுக் கழகம் இணைந்து பயிற்சியளித்து வேலைவாய்ப்பு அளிக்க திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் வெம்பாக்கம் ஒன்றியத் தலைவா் மாமண்டூா்.டி.ராஜூ, துணைத் தலைவா் நாகம்மாள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மாத்தூா் தெய்வமணி, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் எம்.மகேந்திரன், சி.துரை, பாஸ்கா் ரெட்டியாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.