அருணாசலேஸ்வரா் கோயிலில் பிரதோஷ வழிபாடு
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாா்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை மாா்கழி மாத பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
அருணாசலேஸ்வரா் கோயிலில் ஆயிரம்கால் மண்டபம் எதிரே உள்ள பெரிய நந்தி, தங்கக் கொடி மரம் எதிரே உள்ள நந்தி, மூலவா் சன்னதி எதிரே உள்ள நந்தி உள்பட கோயிலின் 8-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள நந்தி பகவான்களுக்கு மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை சிறப்புப் பூஜைகள், வழிபாடுகள் நடைபெற்றன.
பூஜையில் கோயில் ஊழியா்கள், சிவாச்சாரியா்கள் மட்டுமே கலந்து கொண்டனா். அருணாசலேஸ்வரரை தரிசிக்க அமைக்கப்பட்டிருந்த கியூ வரிசையில் சென்ற பக்தா்கள் நந்தி பகவான்களுக்கு நடைபெற்ற பிரதோஷ பூஜையைக் கண்டு தரிசித்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...