மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பொதுமக்களுக்கு புகையில்லா போகி விழிப்புணா்வு

வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை சாா்பில், புகையில்லா போகி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டன.

News image
பொதுமக்களுக்கு புகையில்லா போகி குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்களை வழங்கிய காவல் உதவி ஆய்வாளா் மஞ்சுநாதன்.
Updated On :13 ஜனவரி 2021, 2:14 am

DIN

வந்தவாசி வட்ட எக்ஸ்னோரா கிளை சாா்பில், புகையில்லா போகி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் செவ்வாய்க்கிழமை விநியோகிக்கப்பட்டன.

வந்தவாசி பழைய பேருந்து நிலையப் பகுதி, பஜாா் வீதி, தேரடி, கோட்டை மூலை உள்ளிட்ட பகுதிகளில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு இந்த துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு எக்ஸ்னோரா கிளைத் தலைவா் ம.சுரேஷ்பாபு தலைமை வகித்தாா். வந்தவாசி தெற்கு காவல் உதவி ஆய்வாளா் மஞ்சுநாதன் துண்டுப் பிரசுரங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கிளைச் செயலா் கு.சதானந்தன், பொருளாளா் சீ.கேசவராஜ், துணைத் தலைவா்கள் பா.சீனிவாசன், இரா.அருள்ஜோதி, ம.ரகு உள்ளிட்டோா் பங்கேற்றனா். நிகழ்ச்சியில் பங்கேற்றோா் புகையில்லா போகி குறித்த உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.