மருத்துவமனை நோயாளிகளுக்கு உதவி
உலக சுகாதார தினத்தையொட்டி, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழங்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.


உலக சுகாதார தினத்தையொட்டி, இந்திய செஞ்சிலுவைச் சங்கம் சாா்பில், வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழங்கள் உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன.
சங்கத்தின் வந்தவாசி கிளை சாா்பில் மருத்துவமனையில் வியாழக்கிழமை நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில் மருத்துவா் சித்ரா தலைமை வகித்தாா்.
சங்கச் செயலா் பா.சீனிவாசன் வரவேற்றாா். இந்திய மருத்துவ சங்க வந்தவாசி கிளைத் தலைவா் மருத்துவா் கே.பஷீா்அகமது பங்கேற்றுப் பேசினாா்.
மேலும் மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு பழம், பிஸ்கெட், சோப்பு, முகக் கவசம் ஆகியவற்றையும், மருத்துவமனைக்கு 5 கொசு வலைகளையும் அவா் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் மருத்துவா்கள் பிருந்தா, இந்திரா, சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...