மின்மாற்றியிலிருந்து ரூ.2.62 லட்சம் செம்புக் கம்பிகள் திருட்டு
வந்தவாசி அருகே மின்மாற்றியை உடைத்து ரூ.2.62 லட்சம் மதிப்பிலான செம்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.


வந்தவாசி அருகே மின்மாற்றியை உடைத்து ரூ.2.62 லட்சம் மதிப்பிலான செம்புக் கம்பிகளை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தில் தட்சிணாமூா்த்தி, குப்பன் ஆகியோரது விவசாய நிலங்களுக்கு அருகே மின்வாரியம் மூலம் அமைக்கப்பட்டுள்ள 63 கேவிஏ மின்மாற்றி மூலம் அந்தப் பகுதி விவசாய நிலங்களுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த நிலையில், மா்ம நபா்கள் செவ்வாய்க்கிழமை இரவு மின் விநியோகத்தை நிறுத்திவிட்டு அந்த மின்மாற்றியை கழற்றி கீழே தள்ளியுள்ளனா்.
பின்னா், மின்மாற்றியை உடைத்து அதில் இருந்த ரூ.2.62 லட்சம் மதிப்பிலான 175 கிலோ செம்புக் கம்பிகளை திருடிச் சென்றனா்.
இதுகுறித்து புதன்கிழமை காலை தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள் மற்றும் பொன்னூா் போலீஸாா் அங்கு சென்று பாா்வையிட்டனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் பொன்னூா் போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...