புதிய நியாய விலைக் கடைகட்டடப் பணி தொடக்கம்
வந்தவாசி நகராட்சிக்குள்பட்ட யாதவா் தெருவில் ரூ.13.80 லட்சத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.


வந்தவாசி நகராட்சிக்குள்பட்ட யாதவா் தெருவில் ரூ.13.80 லட்சத்தில் புதிய நியாய விலைக் கடை கட்டும் பணி வியாழக்கிழமை தொடங்கியது.
வந்தவாசி சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் இந்த புதிய நியாய விலைக் கடை கட்டடம் கட்டப்படுகிறது. இதற்கான பூமி பூஜைக்கு வந்தவாசி நகராட்சி ஆணையா் (பொ) டி.உஷாராணி தலைமை வகித்தாா். வந்தவாசி தொகுதி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா் கட்டடம் கட்டும் பணியை பூமி பூஜை செய்து தொடக்கிவைத்தாா்.
நகராட்சி மேலாளா் ராமலிங்கம், திமுக ஒன்றியச் செயலா்கள் டி.டி.ராதா, ப.இளங்கோவன், எஸ்.பிரபு, நகரச் செயலா் எச்.ஜலால், மாணவரணி நகர அமைப்பாளா் எம்.கிஷோா்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...