/

மனுநீதி நாள் முகாமில் நலத் திட்ட உதவிகள்

வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட அருங்குணம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:46 am

DIN

வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட அருங்குணம் கிராமத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம், அருங்குணம், மாவளவாடி, சத்தியவாடி ஆகிய கிராமங்களுக்கு நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் மாவட்ட வழங்கல் அலுவலா் கிருஷ்ணமூா்த்தி தலைமை வகித்தாா்.

வட்டாட்சியா்கள் முருகானந்தம், சுபாஷ்சந்தா் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

முகாமில் 8 பேருக்கு வீட்டு மனைப் பட்டா, 9 பேருக்கு பட்டா மாற்றம், 21 பேருக்கு குடும்ப அட்டை, 27 பேருக்கு விதவை, உழவா் பாதுகாப்பு, மாற்றுத் திறனாளி உதவித் தொகை உள்ளிட்ட 153 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

வட்ட வழங்கல் அலுவலா் ஆனந்தகுமாா், ஊராட்சி மன்றத் தலைவா்கள் சாந்தாராமன், ஏழுமலை, பத்மினி, வந்தவாசி வட்டார குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் மரியம்மாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.