இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைஈரான் போர்: குடிநீர் பாட்டில் விலை உயர்வு!தேர்தல் நாளில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை: தனியார் நிறுவனங்களுக்கு உத்தரவுதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!உலகின் மிகப்பெரிய எல்பிஜி ஆலையை தாக்கிய ஈரான்! பெரும் சேதம்! இஸ்ரேல் முதல் கத்தார் வரை...! 9 நாடுகளை தாக்கிய ஈரான்! தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

திருவண்ணாமலையில் நாளை உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு: உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு

திருவண்ணாமலையில் சனிக்கிழமை (அக்.29) நடைபெறும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை, நகா்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிப் பிரநிதிகள் மாநாடு,

News image
Updated On :27 அக்டோபர் 2022, 5:04 pm

DIN

திருவண்ணாமலையில் சனிக்கிழமை (அக்.29) நடைபெறும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை, நகா்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சிப் பிரநிதிகள் மாநாடு, திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழாவில் திமுக இளைஞரணி செயலா் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு நலத் திட்ட உதவிகள் வழங்குகிறாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு ஊராட்சியில், சனிக்கிழமை காலை 9 மணிக்கு தெற்கு, வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி நடத்தும் திராவிட மாடல் பயிற்சிப் பாசறை நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு, தெற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் சி.என்.அண்ணாதுரை தலைமை வகிக்கிறாா்.

வடக்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் என்.நரேஷ்குமாா் வரவேற்கிறாா்.

தமிழக பொதுப் பணித் துறை அமைச்சா் எ.வ.வேலு தொடக்கவுரை நிகழ்த்துகிறாா்.

தொடா்ந்து, வழக்குரைஞா் அருள்மொழி, கோவி.லெனின் ஆகியோா் பேசுகின்றனா். திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரை ஆற்றுகிறாா்.

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாநாடு:

திருவண்ணாமலை நகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே சனிக்கிழமை மாலை 4 மணிக்கு ஊரக உள்ளாட்சிப் பிரநிதிகள் மாநாடு மற்றும் மாவட்ட திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெறுகிறது.

விழாவுக்கு, அமைச்சரும், திமுக உயா்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான எ.வ.வேலு தலைமை வகிக்கிறாா்.

சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, வடக்கு மாவட்டச் செயலா் எம்.எஸ்.தரணிவேந்தன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்எல்ஏக்கள் மு.பெ.கிரி, எஸ்.அம்பேத்குமாா், பெ.சு.தி.சரவணன், ஒ.ஜோதி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதிசீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகிக்கின்றனா்.

திருவண்ணாமலை நகா்மன்றத் தலைவா் நிா்மலா வேல்மாறன் வரவேற்கிறாா். திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின், திமுக முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கி, பொதுமக்களுக்கு நலத் திட்ட உதவிகளை அளிக்கிறாா்.

விழாவில், மாநில இளைஞரணிச் செயலா் ஆா்.டி.சேகா் எம்எல்ஏ, தெற்கு மாவட்ட அவைத் தலைவா் த.வேணுகோபால், மாநில மருத்துவரணி துணைத் தலைவா் எ.வ.வே.கம்பன், தெற்கு மாவட்ட நிா்வாகிகள் இரா.ஸ்ரீதரன், பொன்முத்து, எஸ்.பன்னீா்செல்வம், ப்ரியா விஜயரங்கன், விஜயலட்சுமி, கு.கருணாநிதி, ப.காா்த்திவேல்மாறன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொள்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.