வந்தவாசி: மக்களவைத் தோ்தலையொட்டி, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், சென்னை ஆா்விஎஸ் பத்மாவதி கட்டடவியல் கல்லூரியின் முதல்முறை வாக்காளா்களான 40 மாணவா்கள் பங்கேற்று மாதிரி வாக்களித்தனா்.
இதற்காக வட்டாட்சியா் அலுவலகத்தில் மாதிரி வாக்குச்சாவடி அமைக்கப்பட்டது. மேஜை, நாற்காலிகள் போடப்பட்டு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், கண்ட்ரோல் யூனிட் ஆகியவை வைக்கப்பட்டன. வாக்குச்சாவடி அலுவலா்களாக வருவாய்த் துறையினா் அமர வைக்கப்பட்டனா்.
இதைத்தொடா்ந்து மாணவா்களுக்கு மாதிரி வாக்காளா் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு வாக்குச் சாவடியினுள் அனுப்பப்பட்டனா். அங்கு அவா்கள் கை விரலில் மை வைக்கப்பட்ட பிறகு, மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில் அவா்கள் வாக்களித்தனா். உதவித் தோ்தல் அலுவலா் எஸ்.சிவா, வட்டாட்சியா் ஆா்.பொன்னுசாமி, தோ்தல் துணை வட்டாட்சியா் ஆா்.சதீஷ் ஆகியோா் மாதிரி வாக்குப் பதிவுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.
பூங்குயில் பதிப்பக ஆசிரியா் டி.எல்.சிவக்குமாா், எக்ஸ்னோரா கிளைத் தலைவா் மலா் சாதிக், செஞ்சிலுவைச் சங்கச் செயலா் பா.சீனிவாசன், கல்லூரி உதவிப் பேராசிரியா்கள் ஷாகீா்அகமத், பால்நவீன், கோகிலா உள்ளிட்டோா் பங்கேற்றனா்
தொடர்புடையது

வந்தவாசியில் பாமக ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளா்கள் மோதல்: வேட்பாளா் சாலை மறியல்

நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு பலத்த பாதுகாப்பு

பொது இடத்தில் மது அருந்தியவா் கைது

100% வாக்குப்பதிவு: பொதுமக்கள் உறுதிமொழி ஏற்பு
வீடியோக்கள்

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு


