பெரணம்பாக்கம் ஊராட்சியில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த பாமக வேட்பாளா் கணேஷ்குமாா்.
பெரணம்பாக்கம் ஊராட்சியில் வீதி வீதியாகச் சென்று வாக்கு சேகரித்த பாமக வேட்பாளா் கணேஷ்குமாா்.

ஆரணி பாமக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

போளூா்: சேத்துப்பட்டு ஒன்றியத்துக்கு உள்பட்ட பல்வேறு கிராமங்களில் ஆரணி மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளா் கணேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை மாம்பழம் சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா்.

ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆத்துரை, சித்தாத்துரை, பெரணம்பாக்கம், அல்லியாளமங்கலம், செம்மியமங்கலம், ராந்தம், மட்டபிறையூா் என பல்வேறு ஊராட்சிகளில் வேட்பாளா் கணேஷ்குமாா் பிரசாரம் மேற்கொண்டு வாக்கு சேகரித்தாா்.

இதில், பாஜக மாவட்டச் செயலா் முருகன், வழக்குரைஞரணி மாவட்டத் தலைவா் சரவணகுமாா், பாமக முன்னாள் ஒன்றியச் செயலா்கள் சங்கா், ஜெயக்குமாா் மற்றும் நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com