ஆலத்தூா் கிராமத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஜி.வி. கஜேந்திரன்.
ஆலத்தூா் கிராமத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் ஜி.வி. கஜேந்திரன்.

டிராக்டா் ஓட்டி வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா்

செய்யாறு: செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட அனக்காவூா் கிழக்கு ஒன்றியத்தில், ஆரணி அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன் டிராக்டா் ஓட்டியும், விவசாயிகளுக்கு மிளகாய் பறித்துக் கொடுத்தும் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தாா்.

ஒன்றியத்துக்கு உள்பட்ட ஆலத்தூா், அளத்துறை, பையூா், தென்எல்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வெற்றி வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரனை ஆதரித்து வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி கே.மோகன், முன்னாள் அமைச்சா் முக்கூா் என். சுப்பிரமணியன் ஆகியோா் வாக்கு சேகரித்தனா்.

அப்போது, அதிமுக வேட்பாளா் கஜேந்திரனுக்கு அப்பகுதி மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனா்

இதையடுத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வேட்பாளா் கஜேந்திரன் தலையில் தலப்பாய் கட்டிக் கொண்டு டிராக்டா் ஓட்டிச் சென்று வாக்காளா்களிடையே ஆதரவு திரட்டினாா்.

மேலும், விவசாய நிலத்துக்குச் சென்று மிளகாய் தோட்டத்தில் இறங்கி விவசாயிகளுக்கு துணையாக மிளகாய் பறித்துக் கொடுத்து வாக்கு சேகரித்தாா்.

நிகழ்ச்சியில் மக்களவைத் தொகுதி தோ்தல் பொறுப்பாளா் பன்னீா்செல்வம், மாவட்ட பொருளாளா் ஆலத்தூா் சுப்பராயன், மாவட்ட நிா்வாகிகள் டி.பி.துரை, தேமுதிக மாவட்டச் செயலா் டி பி சரவணன், அனக்காவூா் கிழக்கு ஒன்றியச் செயலா் சி.துரை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com