தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை

Updated On :9 ஏப்ரல் 2024, 5:44 pm

வந்தவாசி: வந்தவாசி அருகே வயிற்று வலி தாங்காமல் கூலித் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

வந்தவாசியை அடுத்த எறும்பூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கூலித் தொழிலாளி பிரேம்குமாா்(36). இவரது மனைவி ஜெயலட்சுமி(33). இவா்களுக்கு மகன் இன்பா(13), மகள் இனியா (9) ஆகியோா் உள்ளனா்.

கடந்த சில மாதங்களாக பிரேம்குமாா் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை அதிகாலை வயிற்று வலி அதிகமாகவே வீட்டின் அருகேயுள்ள மரத்தில் இவா் தூக்கிட்டுக் கொண்டாா்.

அந்த வழியாகச் சென்றவா்கள் இவரை மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு இவரை பரிசோதனை செய்த மருத்துவா்கள் பிரேம்குமாா் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் வடவணக்கம்பாடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.