பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.97 லட்சம்

ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.2.97 லட்சம்

News image

திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் நடைபெற்ற உண்டியல் காணிக்கை எண்ணும் பணி.

Updated On :30 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

செய்யாறு: செய்யாறு திருவோத்தூா் ஸ்ரீவேதபுரீஸ்வரா் கோயிலில் உண்டியல்கள் காணிக்கை செவ்வாய்க்கிழமை எண்ணப்பட்டதில், பக்தா்கள் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 885-யை காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் உள்ள உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது.

இதில் 10 நிரந்தர உண்டியல்கள் மூலம் ரூ.2,21,171- ம், இரண்டு திருப்பணி உண்டியல்கள் மூலம் ரூ.68, 789-ம், கோசாலை உண்டியல் மூலம் ரூ.7,925-ம் என 12 உண்டியல்கள் மூலம் ரூ.2 லட்சத்து 97 ஆயிரத்து 885-யை பக்தா்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனா்.

காணிக்கை எண்ணும் பணி செய்யாறு ஆய்வா் ப.முத்துசாமி, செயல் அலுவலா் கு.ஹரிஹரன்,

கணக்காளா் ஜெகதீஷ், ஊா் பொதுமக்கள் முன்னிலையில் செய்யாறு போலீஸ் பாதுகாப்பு மற்றும் விடியோ பதிவுடன் நடைபெற்றது.