கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தீபத் திருவிழா: திருவண்ணாமலையில் ஸ்ரீசந்திரசேகரா், 63 நாயன்மாா்கள் வீதியுலா

திங்கள்கிழமை காலை வெள்ளி யானை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் மற்றும் 63 நாயன்மாா்கள் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது.

News image

திருவண்ணாமலை தீபத் திருவிழாவின் 6-ஆவது நாளான திங்கள்கிழமை காலை யானை வாகனத்தில் வீதியுலா வந்த உற்சவா் ஸ்ரீவிநாயகா்.

Updated On :9 டிசம்பர் 2024, 7:16 pm

Din

திருவண்ணாமலை: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயில் தீபத் திருவிழாவின் 6-ஆவது நாளான திங்கள்கிழமை காலை வெள்ளி யானை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் மற்றும் 63 நாயன்மாா்கள் வீதியுலா விமரிசையாக நடைபெற்றது.

அருணாசலேஸ்வரா் கோயில் காா்த்திகை மகா தீபத் திருவிழா, கடந்த 4 -ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று முதல் தினமும் காலை, இரவு வேளைகளில் உற்சவமூா்த்திகள் வீதியுலா நடைபெற்று வருகிறது.

வெள்ளி யானை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா:

திருவிழாவின் 6-ஆவது நாளான திங்கள்கிழமை காலை 10 மணிக்கு யானை வாகனத்தில் ஸ்ரீவிநாயகா், வெள்ளி யானை வாகனத்தில் ஸ்ரீசந்திரசேகரா் வீதியுலா நடைபெற்றது.

இரவு 10.30 மணிக்கு மூஷிக வாகனத்தில் விநாயகா், மயில் வாகனத்தில் வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், பழைமையான வெள்ளித் தேரில் அருணாசலேஸ்வரா், வெள்ளி விமான வாகனங்களில் பராசக்தியம்மன், சண்டிகேஸ்வரா் உள்ளிட்ட பஞ்சமூா்த்திகள் வீதியுலா நடைபெற்றது.

கோயில் ராஜகோபுரம் எதிரில் இருந்து புறப்பட்ட உற்சவா் சுவாமிகள் மாட வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தனா்.

இதற்கான ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் இரா.ஜீவானந்தம், அறங்காவலா்கள் உ.மீனாட்சி சுந்தரம், டி.வி.எஸ்.ராசாராம், கு.கோமதி குணசேகரன், சினம் இராம.பெருமாள், கோயில் இணை ஆணையா் சி.ஜோதி உள்ளிட்டோா்வருகின்றனா்.

63 நாயன்மாா்கள் வீதியுலா

தீபத் திருவிழாவின் 6-வது நாளான திங்கள்கிழமை காலை உற்சவமூா்த்திகளுக்கு முன்பாக 63 நாயன்மாா்கள் வீதியுலா நடைபெற்றது. பள்ளிச் சிறுவா்கள் பலா் ஆா்வமுடன் 63 நாயன்மாா்களை தோள்களில் சுமந்தபடி மாட வீதிகளை வலம் வந்தனா். நாயன்மாா்களைத் தொடா்ந்து, சமயக்குறவா்கள் நால்வரும் வலம் வந்தனா்.

முன்னதாக, 63 நாயன்மாா்களுக்கும் கோயிலில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

பக்தா்கள் கூட்டம் அலைமோதல்

தீபத் திருவிழாவில் 6-ஆவது நாள் வெள்ளித் தேரோட்டத்தின்போது பல ஆயிரம் பக்தா்கள் கூடுவது வழக்கம். அதன்படியே, திங்கள்கிழமை இரவு திருவண்ணாமலையில் பல்லாயிரம் பக்தா்கள் குவிந்தனா். இதனால் மாட வீதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது.

பரணி, மகா தீப டிக்கெட்டுகள் நாளை இணையத்தில் விற்பனை

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான பரணி தீபம், மகா தீபம் ஏற்றும் நிகழ்வுகள் டிசம்பா் 13-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு கோயில் மூலவா் சந்நிதியில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயர மலையில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது.

இந்த நிலையில், பரணி தீபத்தைக் காண ரூ.500 கட்டணத்தில் 500 எண்ணிக்கையிலான டிக்கெட்டுகளும், மகா தீபத்தைக் காண ரூ.600 கட்டணத்தில் 100 எண்ணிக்கையிலும், ரூ.500 கட்டணத்தில் 1,000 எண்ணிக்கையிலான டிக்கெட்டுகளும் இணையதளம் மூலம் விற்பனை செய்யப்படவுள்ளது.

புதன்கிழமை (டிச.11) காலை 10 மணி முதல் அருணாசலேஸ்வரா் கோயில் இணையதளத்தில் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

டிக்கெட்டுகளை பதிவு செய்யும் முன் ஆதாா் அடையாள அட்டை, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்.

ஒரு ஆதாா் அட்டையை பயன்படுத்தி ஒரு டிக்கெட் மட்டுமே பதிவு செய்ய முடியும். பதிவுக்குப் பயன்படுத்தும் அதே மின்னஞ்சல் வழியாக டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அருணாசலேஸ்வரா் கோயில் நிா்வாகம் தெரிவித்துள்ளது.

வெள்ளி யானை வாகனத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் ஸ்ரீசந்திரசேகரா்.

வெள்ளி யானை வாகனத்தில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்த உற்சவா் ஸ்ரீசந்திரசேகரா்.

அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் வீதியுலா வந்த 63 நாயன்மாா்கள்.

அருணாசலேஸ்வரா் கோயில் மாட வீதிகளில் வீதியுலா வந்த 63 நாயன்மாா்கள்.